இளம் எழுத்துகள் 2026 | பாடசாலை மாணவர்களுக்கான படைப்பாக்கப் போட்டி
Announcement
October 1, 2026

Share Event

இளம் எழுத்துகள் 2026 | பாடசாலை மாணவர்களுக்கான படைப்பாக்கப் போட்டி

Author

சிறகுகள் அமையம்

Time

31.10.2026

வாசிப்பு மாதம் 2026ஐ முன்னிட்டு, பாடசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம், கற்பனைத்திறன், படைப்பாக்கச் சிந்தனை, எழுத்தாற்றல் மற்றும் ஆய்வுச் சிந்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் சிறகுகள் அமையம் “இளம் எழுத்துகள் 2026” போட்டியை ஏற்பாடு செய்கிறது. தரம் 1 முதல் 1

வாசிப்பு மாதம் 2026 – இளம் எழுத்துகள் 2026
“வாசிப்பிலிருந்து படைப்பிற்கு…”

வாசிப்பு என்பது அறிவைப் பெறுவதற்கான வழி மட்டுமல்ல; அது கற்பனை, சிந்தனை, கேள்வி எழுப்பும் திறன் மற்றும் புதிய படைப்புகளை உருவாக்கும் ஆற்றலை வளர்க்கும் அடிப்படையாகும்.


இதனை முன்னிறுத்தி, வாசிப்பு மாதம் 2026ஐ முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம், கற்பனைத்திறன், படைப்பாக்கச் சிந்தனை, எழுத்தாற்றல் மற்றும் ஆய்வுச் சிந்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் சிறகுகள் அமையம் “இளம் எழுத்துகள் 2026” எனும் பாடசாலை மாணவர்களுக்கான படைப்பாக்கப் போட்டியை ஏற்பாடு செய்கிறது.

தரம் 1 முதல் தரம் 13 வரை கல்வி கற்கும் மாணவர்கள் தமது தரநிலைக்கு ஏற்ப ஓவியம், கதை, நன்னெறிக் கதை, விஞ்ஞானப் புனைவுக் கதை மற்றும் ஆய்வுக் கட்டுரை ஆகிய ஐந்து பிரிவுகளில் பங்குபற்றலாம்.

ஒரு பாடசாலையிலிருந்து பங்குபற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. பாடசாலைகள் சிறந்த படைப்புகளை மட்டும் தெரிவுசெய்து அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களையும் பங்குபற்ற ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பாடசாலைகள் பொறுப்பாசிரியர் ஒருவரை நியமித்து மாணவர்களுக்கு போட்டியை அறிமுகப்படுத்துதல், படைப்புகளைச் சேகரித்தல், மாணவர் விபரங்களைச் சரிபார்த்தல் மற்றும் படைப்புகளைப் பிரிவு வாரியாகத் தொகுத்து அனுப்புதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மாணவர்கள் தனிப்பட்ட முறையிலும் நேரடியாகப் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம்.

பொதுவான விதிமுறைகள்

• சமர்ப்பிக்கப்படும் படைப்பு மாணவரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
• இணையம் அல்லது பிறரிடமிருந்து பெறப்பட்ட படைப்புகளைத் தமது படைப்பாகச் சமர்ப்பிக்கக் கூடாது.
• ஏற்கனவே வெளியிடப்பட்ட படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
• எழுத்துப் படைப்புகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.
• ஒவ்வொரு மாணவரும் தமது பிரிவில் ஒரு படைப்பைச் சமர்ப்பிக்கலாம்.
• ஒவ்வொரு பிரிவிற்கும் குறிப்பிடப்பட்டுள்ள சொல் / தாள் அளவு வரம்பைப் பின்பற்ற வேண்டும்.
• ஆய்வுக் கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் நூல்கள், கட்டுரைகள், இணையத் தகவல்கள், நேர்காணல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை இயன்றவரை குறிப்பிட வேண்டும்.

சான்றிதழ்கள் மற்றும் அங்கீகாரம்

தகுதியான படைப்பைச் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த படைப்புகளுக்கு விசேட அங்கீகாரம் வழங்கப்படுவதுடன், போட்டியை ஒருங்கிணைக்கும் பொறுப்பாசிரியர்களின் பங்களிப்பும் பாராட்டப்படும்.

போட்டியில் பெறப்படும் படைப்புகளில் இருந்து தெரிவுசெய்யப்படும் சிறந்த மற்றும் தனித்துவமான மாணவர் படைப்புகள் தொகுக்கப்பட்டு சிறப்பு நூலாக வெளியிடப்படும்.e

“உங்கள் படைப்பு ஒரு போட்டிக்காக மட்டும் அல்ல; ஒரு புத்தகத்தின் பக்கமாக மாறலாம்!”

சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 31.10.2026

Reference Documents

Ilam_Eluthukkal_2026_Clean_Modern_Font_2Page_Final.pdf

Download

Ilam_Eluthukkal_2026_Final_Detailed_Web_Circular.pdf

Download

பிரிவு 01 | தரம் 1–2 – ஓவியம்

கருப்பொருள்: “எனது புத்தகம் – எனது வாசிப்பு உலகம்” புத்தகம், வாசிப்பு, நூலகம், பிடித்த கதை அல்லது கதாபாத்திரம், அல்லது மாணவரின் கற்பனை வாசிப்பு உலகத்தை ஓவியமாக வெளிப்படுத்தலாம். தாள் அளவு: A4 (210 × 297 mm)

பிரிவு 02 | தரம் 3–5 – கதை

மாணவர்களின் கற்பனை, வாசிப்பு மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையை எழுதலாம். தலைப்பு: மாணவர் விருப்பம் சொல் அளவு: 80–100 சொற்கள்

பிரிவு 03 | தரம் 6–7 – நன்னெறிக் கதை

நேர்மை, நட்பு, கருணை, பொறுப்பு, ஒற்றுமை, மனிதநேயம், இயற்கைப் பாதுகாப்பு அல்லது சமூகப் பொறுப்பு போன்ற கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட கதையை எழுதலாம். கதையின் ஊடாக ஒரு நன்னெறிச் செய்தி அல்லது வாழ்க்கைப் பாடம் வெளிப்பட வேண்டும். தலைப்பு: மாணவர் விருப்பம் சொல் அளவு: 150–300 சொற்கள்

பிரிவு 04 | தரம் 8–10 – விஞ்ஞானப் புனைவுக் கதை

அறிவியல் சிந்தனையையும் கற்பனையையும் இணைத்து விஞ்ஞானப் புனைவுக் கதை எழுத வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோக்கள், விண்வெளி, எதிர்கால உலகம், புதிய கண்டுபிடிப்புகள், காலநிலை மாற்றம், எதிர்கால மருத்துவம், எதிர்காலக் கல்வி, நேரப்பயணம் போன்ற தளங்களைப் பயன்படுத்தலாம். சொல் அளவு: 350–500 சொற்கள்

பிரிவு 05 | தரம் 11–13 – ஆய்வுக் கட்டுரை

கருப்பொருள்: “வாசிப்பு – மாணவர்களையும் சமூகத்தையும் வலுப்படுத்தும் சக்தி” வாசிப்பும் கல்வியும், வாசிப்பும் சிந்தனைத்திறனும், டிஜிட்டல் கால வாசிப்பு, பாடசாலை நூலகங்கள், கிராமப்புற வாசிப்பு வாய்ப்புகள், சமூக வாசிப்பு முயற்சிகள், வாசிப்பும் தலைமைத்துவமும், வாசிப்பும் சமூகப் பொறுப்பும் உள்ளிட்ட விடயங்களை ஆய்வு செய்யலாம். பயன்படுத்தப்படும் ஆதாரங்களை இயன்றவரை குறிப்பிட வேண்டும். சொல் அளவு: 600–800 சொற்கள்

படைப்புடன் இணைக்க வேண்டிய விபரங்கள்

மாணவரின் முழுப்பெயர், தரம், பாடசாலை, போட்டிப் பிரிவு, படைப்பின் தலைப்பு, பெற்றோர் / பாதுகாவலர் தொடர்பு இலக்கம், பொறுப்பாசிரியர் பெயர் மற்றும் தொடர்பு இலக்கம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு பொறுப்பாசிரியர் விபரங்கள் கட்டாயமல்ல.

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி

“இளம் எழுத்துகள் 2026” சிறகுகள் அமையம் இல. 21, சீனியர் ஒழுங்கை, யாழ்ப்பாணம், இலங்கை. உறையின் மேல் “இளம் எழுத்துகள் 2026 – போட்டிப் பிரிவு: ____” எனத் தெளிவாகக் குறிப்பிடவும். பாடசாலைகள் பல மாணவர்களின் படைப்புகளைப் பிரிவு வாரியாக ஒழுங்குபடுத்தி ஒரே பொதியில் அனுப்பலாம்.

இறுதித் திகதி மற்றும் தொடர்புகள்

இறுதித் திகதி: 31.10.2026 படைப்புகள் குறித்த திகதிக்குள் சிறகுகள் அமையத்தைச் சென்றடைய வேண்டும். தொடர்பு / WhatsApp: 076 286 0975 | 076 871 2817 077 052 3495 | 076 672 9289 076 277 0566