பாடசாலைத் தரவுகள் சேகரிப்பு – 2026 | School Data Collection 2026
Announcement
October 16, 2026

Share Event

பாடசாலைத் தரவுகள் சேகரிப்பு – 2026 | School Data Collection 2026

Author

Admin

இலங்கையின் கடின மற்றும் மிகக் கடினப் பிரதேசப் பாடசாலைகளின் கல்வி, வாசிப்பு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மதிப்பீடு செய்வதற்கான தேசிய அளவிலான தரவுச் சேகரிப்பு முயற்சி.

இணைப்பில் பதிவினை மேற்கொள்ளுங்கள்!   https://forms.gle/SoP9eUYa8Tsk5iJJ6jkkj  

வாட்ஸ் அப் குழுவில் இணைய 

https://whatsapp.com/channel/0029VaFqtDiJENxsJLlYGE36

https://chat.whatsapp.com/L7fk7QyoerJ6cgx5UhBHKt?s=sh&p=a&mlu=4&ilr=4



கடின மற்றும் மிகக் கடினப் பிரதேசப் பாடசாலைகள் – தேவைகள் மதிப்பீடு 2026

இலங்கையின் கடின மற்றும் மிகக் கடினப் பிரதேசங்களில் இயங்கிவரும் பாடசாலைகளின் கல்விசார் தேவைகள், வளப்பற்றாக்குறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் நோக்கில் சிறகுகள் அமையம் இத்தரவுச் சேகரிப்பு முயற்சியை முன்னெடுக்கின்றது. இம்முயற்சியின் மூலம் பாடசாலைகளில் காணப்படும் நூலகம் மற்றும் வாசிப்பு வசதிகள், புத்தக வளங்கள், குடிநீர், மலசலகூடங்கள், வகுப்பறைகள், ஆரம்பப் பிரிவு விளையாட்டு வசதிகள் மற்றும் இடைநிலைப் பிரிவு விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ### எமது நோக்கங்கள் - கடின மற்றும் மிகக் கடினப் பிரதேசப் பாடசாலைகளின் தேவைகளை அடையாளம் காணுதல். - கல்வி வளங்கள் மற்றும் அடிப்படை வசதிகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஆவணப்படுத்துதல். - மாவட்ட மற்றும் கல்வி வலய அடிப்படையிலான தரவுத்தளத்தை உருவாக்குதல். - ஆதாரபூர்வமான கல்விக் கொள்கை பரிந்துரைகளையும் உரிமைசார் செயற்பாடுகளையும் முன்னெடுத்தல். - அரச நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் நன்கொடையாளர்களுடன் இணைந்து பாடசாலைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.

### யார் தகவல்களை வழங்கலாம்?

பாடசாலை அதிபர்கள், பதில் அதிபர்கள் அல்லது பாடசாலை நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகவல்களை வழங்கலாம். மாணவர்களின் தனிப்பட்ட அல்லது குடும்பப் பின்னணி விபரங்கள் சேகரிக்கப்படமாட்டாது. வழங்கப்படும் தொடர்புத் தகவல்கள் சரிபார்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். பொதுவெளியில் வெளியிடப்படும் அறிக்கைகளில் தனிநபர் தொடர்பு விபரங்கள் இடம்பெறாது. **ஒவ்வொரு பாடசாலைக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்வதற்கான ஆதாரபூர்வமான முயற்சியில் இணைந்துகொள்ளுங்கள்.**